வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமரேசனின் மனைவி பானுப்பிரியா. நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று காலை பிரசவ வலி எடுத்ததையடுத்து அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் குமரேசன் சேர்த்தார்.
அங்கு சுகப்பிரசவத்தில் பானுப்பிரியாவுக்கு அடுத்தடுத்து 4 குழந்தைகள் பிறந்தன. அதில் 2 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் அடக்கம். ஆண் குழந்தைகள் 740 மற்றும் 610 கிராம் எடையுடன் பிறந்தன. பெண் குழந்தைகள் 540 மற்றும் 590 கிராம் எடை கொண்டதாக இருந்தன. குழந்தைகள் எடை குறைவாக பிறந்ததால் பிறநதவுடன் இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டன.
இந்நிலையில் 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை இறந்தன. 740 கிராம் எடை கொண்ட ஆண் குழந்தை மட்டும் இன்குபேட்டரில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிறந்த 4 குழந்தைகளில் 3 இறந்த செய்தி அறிந்த குமரேசன் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து டாக்டர் கூறுகையில்,
ஒரே பிரசவத்தில் 3 அல்லது 4 குழந்தைகளை பெற்றெடுப்பது அரிதாகும். கடந்த வாரம் கூட ஒரு பெண் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அதில் 2 குழந்தைகள் இறந்துவிட்டன. நேற்று பிறந்த 4 குழந்தைகளில் 3 இறந்துவிட்டன.
கருவறையில் போதிய இடம் இல்லாததால் குழந்தைகள் வளர முடியாமல் எடை குறைவாகப் பிறக்கின்றன. எனவே, கர்ப்பிணிகள் துவக்கத்திலேயே ஸ்கேன் செய்து பார்த்து அதற்கு ஏற்ப சிகிச்சை பெற வேண்டும் என்றார்.











Leave a comment