4-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து

14-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து (யூரோ) போட்டி போலந்து, உக்ரைனில் நடைபெற்று வருகிறது. பி பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான ஜெர்மனி- போர்ச்சுக்கல் அணிகள் மோதின. தொடக்கத்திலேயே இரு அணிகளும் சிறப்பாக ஆடியதால் விறுவிறுப்பாக இருந்தது.
ஐரோப்பிய கால்பந்து: ஜெர்மனி  1 கோல் போட்டு போர்ச்சுக்கலை வீழ்த்தியது
இரு அணிகளும் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டனர். முதல் பாதி ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்தபோது போர்ச்சுக்கல் அணி அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு கோல் லைனில் விழுந்தது. ஆனால் நடுவர் கோல் கொடுக்க மறுத்ததால் போர்ச்சுக்கல் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை.

2-வது பகுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்களின் ஆட்டம் ஆக்ரோஷமாக இருந்தது. இதன் பயனாக 72-வது நிமிடத்தில் ஜெர்மனி கோல் அடித்தது. சமிகெதிரா அடித்த பந்தை மேரியோ கோமஸ் தலையால் முட்டி கோல் அடித்தார். பதிலுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணியால் கோல் அடிக்க இயலவில்லை. இறுதியில் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஜெர்மனி அணி 2008-ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை கால்இறுதி, 2006-ம் ஆண்டு உலக கோப்பையில் 3-வது இடத்துக்கான ஆட்டம் ஆகியவற்றில் போர்ச்சுக்கலை தோற்கடித்து இருந்தது. தற்போது 3-வது முறையாக மிகப்பெரிய போட்டியில் ஜெர்மனி அணி போர்ச்சுக்கலை வீழ்த்திய உள்ளது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான நெதர்லாந்து 0-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. நெதர்லாந்து அடுத்த ஆட்டத்தில் ஜெர்மனியை 13-ந்தேதியும், அதே தினத்தில் டென்மார்க் அணி போர்ச்சுக்கலையும் சந்திக்கிறது. சி பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், உலக சாம்பியனான ஸ்பெயின்- இத்தாலி அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா- அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment