- By ADIRAI PLUS
-
Postado திங்கள், 16 ஜூலை, 2012
at 10:04:00 AM
லண்டன்:லண்டன் தபால் அலுவலகத்தில், 3.5 கோடி ரூபாய் திருடி விட்டு, ஊமையாக நடித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பிரிட்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி இந்தியர் அம்ரித்பால் மெகாத்,26. கடந்த 2008ம் ஆண்டு முதல், 2009ம் ஆண்டு வரை, மான்செஸ்டரில் உள்ள தபால் அலுவலகத்தில், மற்றொரு பெண்ணின் சேமிப்பு கணக்கை பயன்படுத்தி, 3.5 கோடி ரூபாய் வரை திருடியுள்ளார். இதையடுத்து, 2009ம் ஆண்டு, இவர் பிடிபட்டார். ஆனால், பிடிபட்ட நாள் முதல் கொண்டு, இவர் ஊமையாகவே நடித்துள்ளார். இதனால், இவரது வாக்குமூலத்தை கோர்ட்டில் பதிய முடியாமல் போனது.பஞ்சாப் மொழி தெரிந்த மனோதத்துவ நிபுணர் மூலம், இவருடன் பேசச் செய்து, கோர்ட்டில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பின், முதன் முறையாக, அவர் நேற்று முன்தினம் கோர்ட்டில் பேசினார். "கடவுள் என்னை ஊமையாக்கி விட்டார்' என, நீதிபதியிடம் அம்ரித்பால் கூறினார்.ஆனால், அவரது பித்தலாட்டத்தை ஏற்காத நீதிபதி, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து, தீர்ப்பு கூறினார். இரண்டு மாத காலத்துக்கு, மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெறவும், அம்ரித்பாலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
Leave a comment