புதுடில்லி: "ஸ்பெக்ட்ரம் விலை ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், அனைத்து மொபைல் போன் சேவைக் கட்டணங்கள் இரு மடங்காக அதிகரிக்கப்படும்' என, சேவை நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. புதிய ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட உள்ள நிலையில், அவை அதிக விலைக்கு ஏலம் விடப்படும் பட்சத்தில், மொபைல் போன் நிறுவனங்களும் தங்களது சேவைக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். டில்லியில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலை, பார்த்தி ஏர்டெல் முதன்மைச் செயல் அலுவலர் சஞ்சய் கபூர் உட்பட பல நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர்கள் சந்தித்துப் பேசினர். ஸ்பெக்ட்ரம் விலை அதிகரிக்கும் பட்சத்தில், மொபைல் போன் கட்டணங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கும் அபாயம் உள்ளது என அமைச்சரிடம் தெரிவித்தனர். பின்னர், பார்த்தி ஏர் டெல் நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் சஞ்சய் கபூர் கூறுகையில், "அமைச்சரிடம் இரு முக்கிய விஷயங்கள் குறித்துப் பேசினோம். இந்தியாவில் ஒரு மண்டலத்தில் நிர்ணயித்துள்ள ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விலைக்கும், பிற பெருநகரங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை 100 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால், மொபைல் போனுக்கான கட்டணம் இருமடங்காக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நிமிடத்திற்கு 2 பைசா என கருதி வருகிறது. ஆனால், விலை அதிகரிக்கப்படும்போது, நிமிடத்திற்கு 30 பைசா வரை உயரும் வாய்ப்புள்ளது' என்றார்.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment