
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் புதிய மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 2 மணி நேரமாக மின்தடை அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்ட பகுதிகளுக்கு 4 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள், மின் விடுமுறை நாளாக, முதன் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4,000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத மின்வெட்டு நீடிக்கிறது. பகல், இரவு நேரங்களில் எப்போது மின்சாரம் வரும், போகும் என்று சொல்ல முடிவதில்லை. மின்பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தீவிர ஆலோசனை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் அறிவிப்புகளை மின்வாரியம் நேற்று மாலையில் வெளியிட்டது.
அறிவிப்பில் கூறியுள்ள விவரம்: தமிழகத்தின் மொத்த மின்தேவை 11,500ல் இருந்து 12,500 மெகாவாட்டாக உள்ளது. கிடைப்பதோ 8,500 மெகா வாட். இதனால் சுமார் 3000 முதல் 4000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது. ஏற்கனவே இருந்து வரும் மின் உபயோகக் குறைப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகளால் இப்பொழுது நிலவி வரும் பற்றாக்குறையை சரி செய்ய இயலாத நிலையில், அறிவிக்கப்பட்டதற்கும் அதிகமான மின் தடையை கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே பல்வேறு தரப்பினர் அளித்த யோசனையின் பேரிலும், அவற்றை செயல்படுத்தும் வழிவகைகளைக் கருத்தில் கொண்டும், சில மின்விநியோக கட்டுப்பாட்டு முறைகள் அமலுக்கு கொண்டு வரப்படுகின்றன. யாருக்கு எவ்வளவு வெட்டு: தொழிற்சாலை மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு 40 சதவீத மின்வெட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 2 மணிநேரம் மின்தடை.வரப்மற்ற நகர மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு 4 மணிநேரம் மின்தடை கொண்டு பட்டுள்ளது. வணிக பயனீட்டாளர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் மின்தடை இருக்கும். மின்தேவையின் பற்றாக்குறையை பொறுத்து மின்தடையின் அளவும் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு தேர்வு நேரங்களில் முடிந்த அளவிற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகைகள் செய்யப்படும்.
மேற்கண்ட அனைத்து முறைகளும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. மின் விடுமுறை: ஏற்கனவே தொழிற்சாலைகளுக்கு ஞாயிறு அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 1ம் தேதி முதல் வாரத்தில் 6 நாட்களில் ஒரு நாள் மின்விடுமுறை அமல்படுத்தப்படும். மொத்தம் 6 நாட்களுக்கு 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் தொழிற்சாலைகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. மின்திட்டங்கள் தாமதம் ஏன்?: மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 600 மெகா வாட் திறன் கொண்ட மேட்டூர் அனல்மின் திட்டம்,
1,200 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல்மின் திட்டம், 1,500 மெகாவாட் திறன் கொண்ட தேசிய அனல் மின் கழகத்துடனான (வள்ளூர்) கூட்டுமின் திட்டம் 2,000 மெகா வாட் திறன் படைத்த கூடங்குளம் அணு மின் திட்டம், 500 திறன் கொண்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் ஆகிய மின் திட்டங்கள் இந்த ஆண்டு இயக் கத்திற்கு வந்திருக்க வேண்டும். பல்வேறு காரணங் களால் தாமதமாகி வருகிறது. இத்தகைய பற்றாக்குறையை தவிர்க்க இயலாததாகி விட்டது. எனவே, அடுத்து வரும் சில மாதங்களுக்கு இத்தகைய இடர்பாடுகள் தொடரக் கூடிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் மின்வாரியம் கூறியுள்ளது.











Leave a comment