
ஐதராபாத்: இன்றிரவு 9 மணிக்கு பிறகு கிழக்கு வானத்தில் நிலாவுக்கு அருகில் செவ்வாய் கிரகம் தோன்றும் என பிளானட்டெரி சொசைட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பூமி, சந்திரன், செவ்வாய், புதன், வெள்ளி, சனி உள்பட 8 கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட கிரங்கங்கள் ஒன்றுக்கொன்று நெருங்கி வரும். அப்போது பூமியில் இருந்து வெறும் கண்களாலே இவற்றை தெளிவாக பார்க்கலாம். இன்று இரவு 9 மணிக்கு மேல் கிழக்கு வானில் நிலாவுக்கு அருகில் சிவப்பு நிறத்தில் மினுமினுக்காத நட்சத்திரம் போன்ற வெளிச்சம் தெரியும். இது செவ்வாய் கிரகமாகும். மறுநாள் காலை வரை இந்த அரிய காட்சியை வானில் பார்க்கலாம். ஆனால் விடியற்காலையில் பார்க்க விரும்புகிறவர்கள் மேற்கு பக்கம் பார்க்க வேண்டும். இதே போல் வரும் 12ம் தேதி இரவு 11.30 மணிக்கு மேல் நிலாவுக்கு அருகில் சனிக்கிரகத்தை பார்க்கலாம். ஐதராபாத் பிளானட்டரி சொசைட்டி பொது செயலாளர் ரகுநந்தன் குமார் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்











Leave a comment