பாக்தாத்: சிரியாவில் உள்நாட்டுக் கலவரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் ஈராக்கின் குர்திஷ் பிராந்தியத்துக்கு அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்தம் 9 ஆயிரம் அகதிகள் ஈராக் நாட்டுக்கு சென்றுள்ளனர்.
சிரியாவிலிருந்து எல்லை தாண்டி அகதிகள் தொடர்ச்சியாக வருகை தருவதாகவும் அவர்களுக்கான முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஈராக்கின் குர்திஷ் பிராந்திய குடியேற்றத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை மொத்தம் 9 ஆயிரம் அகதிகள் ஈராக் வந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் அகதிகளை பராமரிப்பது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடனும் தொடர்பு கொண்டு உரிய ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் குர்திஷ் பிராந்திய அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும் அதிகரித்து வரும் சிரிய அகதிகளை பராமரிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் இது ஈராக்கின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடும் என்றும் ஈராக் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
சிரியாவில் 2011-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அது தற்போது உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது.











Leave a comment